Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

August 19, 2026

உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

August 19, 2026

எல் நினோ காலநிலை-வறட்சியான காலநிலை நிலவும் மாவட்டங்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

August 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி
இலங்கை

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி

ThanaBy ThanaMarch 30, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை அகழ்வு செய்யும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு செய்தியாளர்

குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 2014ம் ஆண்டு குறித்த வழக்கு இடைநிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பின்னர் 2017ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் இவ்வழக்கு விசாரணை மீள ஆரம்பிக்கப்பட்டு கடந்த 2025ம் ஆண்டு குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான பிரதேசம் அகழ்விற்கான கட்டளை கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டு கடந்த மாரச் 09ம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது இன்றைய தினம் திங்கட்கிழமை 30 ம் திகதி குறித்த பகுதியை அகழ்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் நிமித்தம் இன்றைய தினம் குறித்த மனிதப் புதைகுழி அமைந்துள்ள பிரதேசம் எனச் சந்தேகிக்கப்படும் பகுதியி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் கண்காணிப்பில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன

1990ம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டு திரும்பிய 167 ஹஜ் யாத்திரிகர்கள் குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பினால் கடத்தி காணாமலாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த மனித புதைகுழி பகுதி அகழப்படுகின்றது.

குறித்த அகழ்வின் போது களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், குறித்த வழக்கின் சட்டத்தரணிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், களுவாஞ்சிக்குடி பொலிஸார், மட்டக்களப்பு பொலிஸ் குற்றத் தடயவியல் பிரிவு, அகழ்வாரய்ச்சித் திணைக்களம், காணாமல் போனோர் அலுவலகத்தினர், பாதுகாப்புப் பிரிவினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் குறித்த பிரதேசத்தில் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026

    எல் நினோ காலநிலை-வறட்சியான காலநிலை நிலவும் மாவட்டங்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

    August 19, 2026

    ஓகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் 1.13 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

    August 19, 2026

    2027-இல் நிறைவடைகிறது IMF ஒப்பந்தம்: 6 பில்லியன் டொலர்களைத் திரட்ட புதிய திட்டம் அவசியம் – முன்னாள் ஜனாதிபதி ரணில்!

    August 19, 2026
    Editors Picks

    கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026

    எல் நினோ காலநிலை-வறட்சியான காலநிலை நிலவும் மாவட்டங்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

    August 19, 2026

    ஓகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் 1.13 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

    August 19, 2026

    கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026

    எல் நினோ காலநிலை-வறட்சியான காலநிலை நிலவும் மாவட்டங்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.