Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மீட்கப்படும் தமிழ்நாட்டின் பெருமை: சோழர் கால செப்பேடுகள் இந்தியா திரும்புகின்றன!
வெளிநாடு

மீட்கப்படும் தமிழ்நாட்டின் பெருமை: சோழர் கால செப்பேடுகள் இந்தியா திரும்புகின்றன!

ThanaBy ThanaMay 17, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமிதமான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்தில் நடைபெற்ற இது தொடர்பான விசேட விழாவில், அந்த நாட்டின் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் (X) இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!

 

11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.

 

சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை  முறைப்படுத்தியதை  குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.

 

நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

    September 28, 2026

    முதலாவது இருபது20 போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

    September 16, 2026

    சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை!

    September 16, 2026
    Editors Picks

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.