கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டதினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றரை வயதான ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் மாமா முறையான தாயின் சகோதரரே குழந்தையை கீழே வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தற்போது குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.