Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

July 10, 2026

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

July 10, 2026

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

July 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!
மலையகம்

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

ThanaBy ThanaJuly 10, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி தொடர்பான உயர்மட்ட மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெலுங்கானா அரசின் அழைப்பின் பேரில் கலந்துக் கொண்டார். இம்மாநாடு தெலுங்கானாவில் துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா தலைமையில் நடைபெற்றது.

தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு துறையில் தெலுங்கானாவை முக்கிய மையமாக உருவாக்குவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடலில் செந்தில் தொண்டமான் உட்பட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த காலங்களில் இலங்கையில் செந்தில் தொண்டமான் வெற்றிகரமாக முன்னெடுத்த வேலைத்திட்டங்களை கருத்தில் கொண்டு அவருடைய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அழைப்பு விடுக்கப்பட்டது.

• இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு பின் 61 ஆண்டுகளாக பதுளை மாவட்டத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் இருந்த சூழ்நிலையில், செந்தில் தொண்டமான் 2009 ஆம் ஆண்டு மின்சார அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், பதுளை மாவட்டத்தின் அனைத்து தோட்டப் பகுதிகளுக்கும் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் முழுமையான மின்சார வசதியை வழங்கினார்.

• கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், கல்வி பொதுத் தராதர உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களை ஆசிரியர் பயிற்சிக்குத் தேர்வு செய்து, ஐந்து ஆண்டுகளில் பட்டப்படிப்புடன் ஆசிரியர்களாக உருவாக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

• 2013 ஆம் ஆண்டு இந்திய அரசுடன் கலந்துரையாடி, மலையக மக்களுக்கான முதல் வீடமைப்புத் திட்டத்தை பெற்றுத் தந்தார்.

• சமூக சேவை அமைச்சின் ஊடாக 15,000 முதியவர்களுக்கு “பின்படி” ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டம் முதன்முறையாக ஊவா மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

• தோட்டப் பகுதிகளில் முதன்முறையாக கார்பெட் பாதைகள் அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்தார்.

• இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட காலத்தில், இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை பெற்றுத் தந்தார்.

• 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 தொற்றுக் காலத்தில் கொழும்பு மற்றும் மலையக பகுதிகளை சேர்ந்த 40,000 குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை தனிப்பட்ட ரீதியில் ஏற்பாடு செய்து வழங்கி வைத்தார்.

* 2021 ஆம் ஆண்டு தமிழக அரசுடன் கலந்துரையாடி 4 கப்பல் உணவுப் பொருட்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தார்.

• கிழக்கு மாகாண ஆளுநராக இருந்தபோது, இந்தியாவில் வசித்து வந்த இலங்கை அகதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அனுமதியுடன் முதன்முறையாக இலங்கை கடவுச்சீட்டை இந்தியாவில் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

• உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கு விடுவிக்கப்படாமல் இருந்த காணிகளை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வழங்கி வைத்தார்.

• கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்படாமல் இருந்த நிரந்தர நியமனங்களை வழங்கி வைத்தார்.

* சமூக சேவைக்காக உலக சாதனையாளர் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

இது போன்று இக்கட்டான சூழ்நிலையில்களில் தெளிவான பல முடிவுகளை எடுத்து, அதனை வெற்றிகரமாக அமுல்படுத்தியதை அடுத்து பசுமை வளர்ச்சி பொருளாதார உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இம்மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    “Ceylon Tea Village” (கொத்தணி தேயிலை கிராமங்கள்) 500 உருவாக்கும் வேலைத்திட்டம் 15 ஆம் திகதி ஆரம்பம்

    July 10, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026
    Editors Picks

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.