நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடாதே: மொனராகலையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்!
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடாதே பொது மக்கள்
கையொப்பம் திரட்டும் பணி (19) தினம் மொனராகலை மாவட்டம் புத்தல பிரதேசத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் பங்கேற்று இதனை ஆரம்பித்து வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான டப்ளியு.எச். எம் தர்மசேன, ரோஹினி குமாரி கவிரத்ன விஜயரத்ன உள்ளிட்ட புத்தல பிரதேச மக்கள் இதில் கையெழுத்திட்டனர்.
