Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026

அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

October 10, 2026

PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்
இலங்கை

இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

ThanaBy ThanaJuly 30, 2026No Comments5 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

2026 ஆம் ஆண்டின் பொருளாதாரப் பயணம் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்த கருத்துகள்

இலங்கையின் கடன் மதிப்பீடு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து ஸ்டாண்டர்ட் அண்ட் பூவர்ஸ் (S&P) நிறுவனத்தினால் 2026 ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய மதிப்பீட்டின்படி, இலங்கையின் கடன் மதிப்பீட்டை முன்னர் இருந்த மட்டத்திலேயே ஸ்திரமாகப் பேணுவதில் அரசாங்கம் வெற்றிகண்டுள்ளது.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் மத்திய கிழக்குப் போர்ச்சூழல் போன்ற வெளிப்புற அதிர்ச்சிகளை எதிர்கொண்ட போதிலும், பொருளாதாரப் பாதையை மாற்றாமல் முன்னோக்கிச் சென்றதன் மூலமே இந்த ஸ்திரத்தன்மையை பேண முடிந்தது என்பதை விசேடமாகக் குறிப்பிட வேண்டும். இதனை நாம் ஒரு சிறந்த வெற்றியாகவே காண்கிறோம்.

மேலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் அவசியமான பரிமாற்றம் மற்றும் மாற்றத்தக்க தன்மை (Transfer and Convertibility – T&C) மதிப்பீடு குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியடைந்துள்ளது. இதில், முதலீட்டாளர் ஒருவர் தாம் ஈட்டும் இலாபத்தைத் தமது சொந்த நாட்டிற்குத் திருப்பி எடுத்துச் செல்வதற்கான சாத்தியமும், தாங்கள் பெற்ற கடன்கள் மற்றும் வட்டியைக் செலுத்துவதற்காக உள்நாட்டு நாணயத்தை வெளிநாட்டு நாணயமாக மாற்றுவதற்கான சாத்தியமும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் மிக ஆபத்தான CCC மட்டத்திலிருந்த இந்தத் தரப்படுத்தல், 2025 இல் CCC+ ஆகவும், 2026 தற்போது B- (B minus) ஆகவும் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாகவே அந்த நிலை வளர்ச்சி அடைந்துள்ளது எனக் கூற வேண்டும். இப்போது ஸ்திரத்தன்மையிலிருந்து வெளியேறி, குறிப்பாக அந்நிய செலாவணி பணப்புழக்கம் மற்றும் கையிருப்புத் தொகையைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் அதற்கு வழிவகுத்துள்ளன. எனவே, இந்த B minus நிலை குறிப்பாக பாராட்டுக்குரியது.

இந்த வெளிநாட்டுக் கையிருப்புத் தொகை, இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமோ அல்லது பொருளாதாரத்தைச் சுருக்குவதன் மூலமோ கட்டியெழுப்பப்பட்டவை அல்ல. அந்த அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும் அவ்வாறே தொடர அனுமதித்து, மத்திய வங்கியின் மூலோபாயத் தலையீடு மூலம் நிதி ஸ்திரத்தன்மையைப் பேணி கையிருப்புத் தொகை உயர்த்தப்பட்டுள்ளன. இதனைப் பிரகடனப்படுத்துவது இது குறித்த புரிதலும், அனுபவமும், நிபுணத்துவ அறிவும் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களே தவிர, சமூக வலைத்தளங்களில் சிலர் கூறுபவை அல்ல. எனவே, இது குறிப்பாக கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். இந்த B minus நிலையைப் பெற்றுக்கொடுப்பதற்காக, சர்வதேச நிதி நிறுவனத்தினால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் கடன் வழங்குநர்களுடனான தொடர்பு என்பன காரணங்களாக அமைகின்றன.

கடந்த கால அனுபவத்தின்படி, நமது நாட்டின் கடன் வெளிப்படைத்தன்மை எவ்வாறிருக்கிறது என்பது தெரியவில்லை. சில கணக்காய்வு அறிக்கைகளின்படி பெறப்பட்ட கடன்கள் எங்கு பதிவாகியுள்ளன என்பது கூடத் தெரியாத நிலை இருந்தது. கடன் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால், முதலீட்டாளர்களின் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.

தற்போது இந்த அறிக்கையானது, 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, முதலீட்டாளர்களுடன் உள்ள உறவைக் கட்டியெழுப்புவதிலும் கடன் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதிலும் இலங்கை மிகப் பாரிய மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதைக் காட்டுகிறது.

அதன்படி, வழங்கப்பட்ட ஒட்டுமொத்த 50 புள்ளிகளில் 43.67 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள எமக்கு இயலுமாகியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.3 புள்ளிகள் வளர்ச்சியாகும். 2025 ஆம் ஆண்டில் இது 37.33 ஆக இருந்தது. எனவே, 2026 ஆம் ஆண்டில் மதிப்பீட்டுக்குள்ளான நாடுகளுக்கு மத்தியில் நாம் 4 ஆவது இடத்தைப் பெற்றுள்ளோம்.

இதன்படி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் கடன் வெளிப்படைத்தன்மையையும் வளர்த்துக் கொள்வதில் இலங்கையானது 4 ஆவது இடத்தைப் பெற்றுள்ளமை, பரிமாற்றம் மற்றும் மாற்று மதிப்பீட்டின் (Transfer and Convertibility rating) ‘B minus’ என்ற நிலையை மேம்படுத்திக்கொள்ள உதவியாக அமைந்ததாக நாங்கள் கருதுகிறோம்.

ஒட்டுமொத்தமாக, இந்த அரசாங்கம் பின்பற்றிய செயற்பாடுகளில் சில முக்கிய துறைகளே இதற்கு அடிப்படையாக அமைந்தன என சுருக்கமாகக் கூறலாம். பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் சரியான கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றியதன் மூலம் எம்மால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1% பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கியமானதொன்றாகும்.

அதேபோன்று, அரச சேவைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் அரச முதலீடுகளை மேற்கொள்வதற்கும் வருமானங்களை ஈட்டிக்கொள்ள வேண்டும். அந்த வருமானங்களை திட்டமிடுதல் மற்றும் திட்டமிட்டவாறு வருமானங்கள் சேகரிக்கப்படுகின்றனவா என்பதும் இந்த நிதிக் ஒழுக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். வருமானங்களைச் சேகரிக்கும் அந்தத் திறனை, அரசாங்கம் பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை நாளாந்தம் நாம் கண்காணித்து வருகிறோம். எமது இலக்குகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

உதாரணமாக, 2026 ஜூலை மாதமளவில், ஆண்டின் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்குகளில் 63.5 சதவீதத்தை அடைந்து கொள்ள அரசாங்கத்திற்கு இயலுமாகியுள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டில் நாம் திட்டமிட்ட வருமான இலக்குகளை எளிதில் அடைந்து கொள்வது மாத்திரமன்றி, அதனை தாண்டிச் செல்லவும் முடியும். திட்டமிடல், நிதி ஒழுக்கம், வருமான சேகரிப்பை மேம்படுத்துவதுடன் நாம் செயற்படுகிறோம் என்பதே இதன் மூலம் தெளிவாகிறது. அரசாங்கம் வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைத்த இந்தச் செலவுகள் பொதுமக்களுக்காகச் செலவிடப்படும் என்றும் அரச நிர்வாகம் மற்றும் பொதுச் சேவைகளுக்கான தொகையொன்றினை நாம் வரவு-செலவுத் திட்டத்தில் சமர்ப்பித்துள்ளோம். அந்தச் செலவுகளை எத்தகைய சிக்கல்களுமின்றி ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான நிதியைத் திரட்டிக் கொள்ளும் இயலுமை எங்களிடம் உள்ளது.

அத்துடன், வரவு-செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுகளாக ஒதுக்கப்பட்ட பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை காணப்படுகிறது. அந்தப் பணத்தைச் செலவிடும் பொறிமுறையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தால், வினைத்திறன், சில தடைகள் ஆகியவையைத் தவிர்த்து, நிதி ஒழுக்கத்தை மிக உயர்வாக வெளிக்காட்டுதல் மற்றும் வருமானத்தைத் திரட்டிக் கொள்ளுதல் என்பன இதற்கு பங்களிப்புச் செய்துள்ளன.

அவ்வாறே, பொருளாதாரத்தைச் சுருக்காமல் வெளிநாட்டுக் கையிருப்புகளை கட்டியெழுப்பும் செயற்பாட்டை எங்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ள முடிந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் அன்னியச் செலாவணிக் கையிருப்பு வீதம் டொலருக்கு நிகராக குறைந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விடும் என்ற கருத்தை பரப்புவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. டொலருக்கு நிகராக ரூபாயின் பெறுமதி 400 – 500 வரை அதிகரிக்கும் என்று ஒரு பெரிய அச்சம் உருவாக்கப்பட்டது. அவை அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மதிப்பீடு எமக்கு ஒரு உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டு, கையிருப்புகளும் கட்டியெழுப்பப்பட்டுள்ளன என்பதே இதன் மூலம் தெளிவாகிறது. அதுவே பிரதான காரணியாக மாறியுள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

மேலும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில சவால்களும் இதனுடன் உள்ளன. உள்நாட்டு ஆட்சி, அரசியல் சவால்கள் ஆகிய அனைத்தையும் எங்களால் எளிதில் வென்றெடுக்க முடியும். அத்துடன், கட்டமைப்பு ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ள சில சவால்களும், வெளிப்படையாகக் கட்டுப்படுத்த முடியாத சில சவால்களும் உள்ளன. அதிலுள்ள பிரதான சவாலானது, கடந்த காலங்களில் அந்தந்த அரசாங்கங்கள் பெற்றுக்கொண்ட அவதானமற்ற மற்றும் தேவையற்ற கடன்கள் காரணமாக எமது திறைசேரிக்கு பெருமளவிலான கடன் வட்டியினை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளமையாகும். 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் ரூபா 2,500 பில்லியனுக்கும் அதிகமான தொகையை வட்டியாகச் செலுத்த வேண்டியுள்ளதுடன், இது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பாரிய தடையாக அமைகிறது. நாம் படிப்படியாக இவற்றுக்கு முகம் கொடுத்து முன்னோக்கிச் செல்கிறோம்.

மூலோபாய ரீதியாக மத்திய காலக் கடன் பெறும் முறையின் மூலம் நாம் ஏற்கனவே முன்னேற்றத்தைக் காட்டியுள்ளோம். சர்வதேச நிறுவனங்களும் அதனைப் பாராட்டியுள்ளன. நாம் படிப்படியாகத் திறைசேரி பிணைமுறிகள் பக்கமாக நகர்ந்து, நீண்டகாலக் கடன் பெறும் திறைசேரிப் பிணைமுறிகளை ஓரளவு குறைந்த நிலையான வட்டி விகிதங்களில் பெற்று, கடன் நிலைபேற்றுத்தன்வையைப் பேணிக்கொள்ள முடிந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள் மற்றும் சமிக்ஞைகள் இந்த அறிக்கையில் உள்ளன.

அடுத்துள்ள தடை என்னவென்றால், இந்த மொத்தக் கடன்களில் சில தோல்வியடைந்த மற்றும் பயனற்ற விடயங்களுக்காகப் பெறப்பட்டவையாகும். இது ஒரு சவாலாக உள்ளதுடன், நாம் அதனை முகாமைத்துவம் செய்து வருகிறோம்.

மறுபுறம் நாம் முகங்கொடுக்க நேரிடும் வெளிப்புற தாக்கங்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் மத்திய கிழக்குப் போர்ச் சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சிகளாக இருக்கலாம். இவை அனைத்திற்கும் முகங்கொடுக்கக் கூடிய மிக வலுவான, தாங்கும் திறனுள்ள ஒரு பொருளாதாரம் அவசியமாகும். அந்த நிலையை நாம் ஒரு அளவிற்கு அடைந்துள்ளோம். குறிப்பாக, வலுசக்தி சந்தையில் ஏற்பட்ட தாக்கம், நாம் அனைவரும் அறிந்தபடி இலங்கை பிரதானமாக இந்த இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை பயன்படுத்தியே போக்குவரத்துத் துறையை செயற்படுத்துகிறது. எதிர்காலத்தில் நாம் சில கட்டமைப்பு மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டியுள்ளது. தற்போதும் இந்த எரிபொருள் சார்ந்திருத்தலில் சில சவால்கள் உள்ளன. அதேபோல், எங்களிடம் பாரிய அளவில் எரிபொருள் சேமிப்பு வசதிகள் இல்லை. அது குறித்தும் நாம் சில முடிவுகளை எடுத்து வருகிறோம்.

இந்த வெற்றிகளை அடைந்துகொள்வதற்கு சரியான முடிவுகளை எடுத்தல், கொள்கை ஒருமைப்பாட்டைப் பேணுதல், அரசியல் ஸ்திரத்தன்மையைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் சரியான முறையில் ஆட்சி நடத்துதல் ஆகிய விடயங்கள் முக்கியமானவை என்பதைக் குறிப்பிட வேண்டும். அத்துடன், அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் அனைவரதும் பங்களிப்பு அதற்கு கிடைப்பதன் மூலம், இந்த அடைந்துகொண்ட ஸ்திரத்தன்மையையும் வெற்றியையும் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்த்தி, பொதுமக்களுக்குத் தேவையான பலன்களைப் பெற்றுக்கொடுக்க எம்மால் முடியும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-07-29

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026
    Editors Picks

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.