Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026

அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

October 10, 2026

PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளான மீனவர்களை மீட்கக் கடற்படை மற்றும் விமானப்படை கூட்டு நடவடிக்கை: தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆலோசனை*
இலங்கை

சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளான மீனவர்களை மீட்கக் கடற்படை மற்றும் விமானப்படை கூட்டு நடவடிக்கை: தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆலோசனை*

ThanaBy ThanaAugust 1, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

*சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளான மீனவர்களை மீட்கக் கடற்படை மற்றும் விமானப்படை கூட்டு நடவடிக்கை: தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆலோசனை*

 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பான நிலைமை காரணமாக விபத்துக்குள்ளான மற்றும் காணாமல் போன மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து பாரிய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

 

தற்போதைய நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹவத்த, நேற்று இரவு கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் தொழிலுக்குச் சென்ற சில படகுகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

அதற்கமைய, சிலாபத்திலிருந்து தொழிலுக்குச் சென்ற OFRPA 8108 CHW என்ற படகு இரண்டு மீனவர்களுடன் இதுவரை காணாமல் போயுள்ளது. மேலும், நீர்கொழும்பிலிருந்து சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், அதில் ஒரு படகு கற்பாறையில் மோதி முழுமையாகச் சேதமடைந்துள்ளது. நீர்கொழும்பிலிருந்து OFRP-A-5277 NBO என்ற படகில் சென்ற கடுபிடிகே பிரசாத் மெக்மில்லன் பெர்னாண்டோ என்ற மீனவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது உடல் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த படகில் இருந்த மற்றைய மீனவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. விபத்துக்குள்ளான மற்றைய நீர்கொழும்பு படகில் இருந்த இரு மீனவர்களும் வேறொரு படகின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

இந்த அனர்த்த நிலைமை குறித்துக் கவனம் செலுத்திய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர்  ரத்ன கமகே, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கும் உரிய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இலங்கை விமானப்படையின் விசேட கண்காணிப்பு விமானம் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கடற்படைக் கப்பல்களும் அப்பிரதேசங்களில் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அத்துடன் பிரதேச மீனவர்களும் தமது படகுகள் மூலம் இந்தத் தேடுதல் நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்து வருகின்றனர்.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026
    Editors Picks

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.