52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று (13) கொழும்பில் நியமனம் வழங்கப்படவுள்ளது
.
இலவச சுகாதார சேவையின் மனித வளத்தை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், 52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) நியமனக் கடிதங்களை வழங்குதல் மற்றும் கதிரியக்க நிபுணர் (Radiographer) அறிமுக மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சிக்காக 64 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் நிகழ்வு, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று (13) நடைபெறவுள்ளது
.
அதன்படி, இந்த நியமனம் வழங்கும் மற்றும் விழிப்புணர்வுத் திட்டம் இன்று முற்பகல் 11.00 மணிக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் உயிரியல் மருத்துவ பொறியியல் பிரிவின் (Biomedical Engineering Division) புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது
.
வைத்தியசாலைக் கட்டமைப்பில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைக் குறைத்து, நோயாளி பராமரிப்புச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதும், பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மக்களுக்குத் திறமையான மற்றும் தரமான சுகாதாரச் சேவையை வழங்குவதும் இந்தப் புதிய ஆட்சேர்ப்புகளின் நோக்கமாகும்
.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் ஆலோசனையின் கீழ், கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளில் பல சுகாதார தொழில் பிரிவுகளுக்குப் புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் பயிற்சிக்கான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
. நாட்டின் இலவச சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான மனித வளத்தை முறையாக மேம்படுத்துவது அமைச்சின் முதன்மை நோக்கமாகும்
.
