முஸ்லிம் காங்கிரஸின் 32வது பேராளர் மாநாடும் அஷ்ரஃபின் 26வது நினைவேந்தலும் : அடுத்த கட்ட நகர்வுகளும்!
(எழுத்து : வை.அறபாத்)
இலங்கைச் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் முகவரியாகவும் அவர்களின் அரசியல் தன்னாதிக்கத்தின் குரலாகவும் திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தனது வரலாற்றுச்சிறப்புமிக்க 32வது தேசிய பேராளர் மாநாட்டை இயக்கம் உதித்த காத்தான்குடி மண்ணில் எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி புதன்கிழமை நடாத்தவுள்ளது.
1981 செப்டம்பர் 21ல் காத்தான்குடியில் மர்ஹூம் அஹமத் லெப்பை சேர்மன் அவர்களின் தலைமையில் இயக்கமாகத்தோற்றுவிக்கப்பட்டு, பின்னர் 1986 நவம்பர் 26ல் கொழும்பு பாஷா விலா மண்டபத்தில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களால் அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்ட இக்கட்சி, இயக்கமாகி 45 ஆண்டுகளையும் அரசியல் கட்சியாகி 40 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும் வரலாற்று மைல்க…