ஜனாதிபதி நிதிய சேவைகளை விஸ்தரிப்பதில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கிழக்கு மாகாண பிரதேச செயலகங்கள் பாராட்டு
பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் துரிதமான சேவைகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி நிதிய சேவைகளை பிரதேச செயலக மட்டத்தில் விஸ்தரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டில் உயரிய செயல்திறனை வெளிப்படுத்திய கிழக்கு மாகாணத்தின் பிரதேச செயலகங்களை பாராட்டும் “சேவை பாராட்டு” வேலைத்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியற்கலை கற்கைகள் நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகங்களுக்கு இடையில், ஜனாதிபதி நிதிய விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வது மற்றும் அவற்றுக்கு உடனடியாக பதிலளிக்கும் வினைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 3 பிரதேச செயலகங்கள் வீதம், தெரிவு செய்யப்பட்ட 9 பிரதேச செயலகங்கள் இதன்போது பாராட்டப்பட்டன.
அதற்கமைய, அம்பாறை மாவட்டத்தில் முதல் இடத்தை சம்மாந்துறை பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை கல்முனை பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தை காத்தான்குடி பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை மண்முனை வடக்கு பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன.
திருகோணமலை மாவட்டத்தில் முதல் இடத்தை திருகோணமலை நகர் மற்றும் கடவத் சதர பிரதேச செயலகங்களும், இரண்டாம் இடத்தை கிண்ணியா பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை மூதூர் பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன.
“சேவை பாராட்டு” ” வேலைத்திட்டத்தின் முதலாவது நிகழ்வு கொழும்பிலும், இரண்டாவது நிகழ்வு யாழ்ப்பாணத்திலும் நடத்தப்பட்ட நிலையில், இது மூன்றாவது நிகழ்வாகும்.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரி
