கொழும்பு புளூமெண்டல் காவல் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி, விஷ போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் 31 வயதுடைய உதவி பொலிஸ் பரிசோதகர் ஆவார். இவர் கடந்த நான்கு வருடங்களாக புளூமெண்டல் காவல் நிலையத்தில் குறித்த பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
