பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணத்தில் கலந்துகொண்ட பிக்குமார் உள்ளிட்ட குழுவினர், தொடர்ந்தும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள வீதியில் தங்கியிருந்து தமது போராட்டத்தைத் முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்தடைந்த இந்த குழுவினர், ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க அவ்விடத்திற்கு நேரில் வருகை தந்து பிக்குமாரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். எனினும், ஞானசார தேரரின் விடுதலையை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என்ற தமது கோரிக்கையில் பிக்குமார் உறுதியாகவுள்ளமையால், அப்பகுதியில் தொடர்ந்தும் அமைதியின்மை நீடித்துவருவதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
