Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

July 18, 2026

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 18, 2026

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

July 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » எந்தவொரு பரீட்சைக்கும் தாய்மொழியைப் பயன்படுத்தும் உரிமை நிலைத்திருக்க வேண்டும்
இலங்கை

எந்தவொரு பரீட்சைக்கும் தாய்மொழியைப் பயன்படுத்தும் உரிமை நிலைத்திருக்க வேண்டும்

ThanaBy ThanaMarch 8, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சையையும், சிங்களவர்கள் சிங்கள மொழியைப் பயன்படுத்தியும், தமிழர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தியும் தமது தாய் மொழியில் பரீட்சை எழுதுவதற்கான உரிமை நாட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், சட்டக்கல்லூரியின் நடவடிக்கைகளை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்த தீர்மானித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வினாத்தாள்களுக்கு விடை எழுதுவதற்கு இடைக்காலத்தின் போது சந்தர்ப்பம் வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பரீட்சைகள் எதுவாக இருந்தபோதிலும் அதற்கு தாய்மொழியில் பதிலளிப்பதற்கான உரிமை அடிப்படை உரிமையாகும் என்றும் அவர் கூறினார். ஏந்தவொரு நாட்டிலும் ஆரம்பக் கல்வி தாய்மொழியிலேயே வழங்கப்பட வேண்டும் என்பதை யுனெஸ்கோ சர்வதேச அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு, கலாநிதி பட்டம், அதற்கும் மேற்பட்ட பட்டங்களுக்கும் பதிலளிக்க தாய்மொழி தேவைப்படுமாயின் அதற்கு இடமளிக்கப்படுவது அடிப்படை மனித உரிமையாக நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், சட்டக் கல்லூரியின் நிருவாக சபையில் உள்ள நீதிபதிகள் இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தி அடிப்படை தாய்மொழியான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத முறையில் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்தன ஆகியோர் கலந்து கெண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

    July 18, 2026

    ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

    July 18, 2026

    நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

    July 18, 2026

    மலையக சமூகத்தின் வாழ்வியலைப் படம்பிடித்த ‘Uncover’ கண்காட்சி: பிரதி அமைச்சர் பிரதீப் பங்கேற்பு!

    July 18, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.