லிந்துலை ,நாகசேனை டில்குல்ற்றி வழியாக பசுமலை நகருக்கு செல்லும் பாதை கடந்தகாலத்தில் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லாதிருந்த நிலையில் இவ்வருட ஆரம்ப காலப்பகுதியில் காப்பட் இடப்பட்டு சீர்த்திருத்தம் செய்யப்பட்டதுடன், டயகம முதல் தலவாக்கலைக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் உகந்த நிலையில் காணப்பட்டது.
இதே நேரம் இப்பாதையூடாக அட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேரூந்தும் ஐந்து மாதத்திற்கு முன்பு இயக்கப்பட்டது.
எனினும் கடந்த காலத்தில் ஏற்ப்பட்ட சீரற்ற மழைக்காரணமாக குறித்த பாதையில் உள்ள பாலம் ஒன்று உடைந்து போக்குவரத்துக்கு தடையேற்ப்பட்டுள்ளதுடன், குறித்த பேரூந்து சேவையும் இடை நிறுத்தப்பட்டது.
மேலும் பாதையை புணரமைக்க இலங்கை மின்சார சபையில் அகற்றப்பட்ட மின்சார தூண்கள் வழங்ப்பட்டுள்ளதுடன் கிறன்லி தோட்ட நிர்வாகம் பாலத்தின் சீர்த்திருத்த பணிகளை முன்னேடுத்தப் போதும் , வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாக பாதையை புணரமைக்க வேண்டாமென குறிப்பிட்டதன் அடிப்படையில் தோட்ட நிர்வாகம் பணிகளை இடைநிறுத்தியது.
எனவே குறித்த பாதை பல்லாயிரக்கணக்கான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அதேவேளை குறித்த பாதையை உடனடியாக சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து சீரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கைவிடுத்த நிலையில் தற்போது இந்த பாதை தொடர்பில் மலையகம். lk தளத்திலும் செய்தியாக வெளிக்கொண்டுவரப்பட்ட நிலையில் சம்பந்ப்பட்ட அதிகரிகள் இப்பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தி தற்போது பாலம் மக்களுக்காக புணரமைக்கப்பட்டுள்ளது.
எனவே இப்பாலத்தினை சீரமைத்து மக்களின் போக்குவரத்திற்காக கையளிக்கப்பட்டு அரச பேரூந்தும் தற்போது இயக்கப்படுகிறது. மேலும் விரைவாக நடவடிக்கை எடுத்து இப்பாலத்தினை புனரமைத்து தந்த அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை மக்கள் தெரிவிகக்கின்ற வேளையில் மலையகம். lk மக்கள் ஊடகம் என்ற வகையில் நன்றிகளை சம்பந்தப்பட்ட அதிகரிகரிகளுக்கு தேர்விக்கின்றது..
சரத்