மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, கொழும்பு – ஐந்துலாம்பு சந்தியில், இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது, கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் மலையக மக்களின் வாழும் உரிமையைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தினார்.
