நமுனுகுலை 12 ம் கட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாரிய மண்மேடும் கற்களும் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையினால் எல்ல பசறை வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதாக நமுனுகுலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றும் இன்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த வீதியில் சரிந்து விழுந்த மண்மேடு பாரிய கற்களும் அகற்றும் பணியில் ஈடுபட்டதனை தொடர்ந்து தற்போது பசறை எல்ல பகுதிக்கான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
ராமு தனராஜா
