பிரித்தானிய காலனித்துவத்தில் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்கள் இலங்கையில் பல வாழ்வியல் அனுபவங்களோடு தங்கள் இருப்பை இருநூறு வருடகாலம் நிலைநிறுத்தியுள்ள நிலையில் (1823 – 2023) அவ் அனுபவங்களை மீட்டிப்பார்க்கின்ற தருணமாக இக்காலகட்டம் விளங்குகிறது.
மலையக சமூகத்தின் வரவு, உழைப்பு, வாழ்வு அனுபவங்களை மீட்டிப்பார்க்கும் வகையிலான தொடர் ஆய்வரங்க செயற்பாட்டை நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம் இணைய வழியில் எதிர்வரும் மே மாதம் தொடக்கம் தொடர்ந்து ஐம்பது மாதங்கள் நடாத்த திட்டமிட்டுள்ளோம்.
சமூக, பொருளாதார, கலை, இலக்கிய, கல்வி, விளையாட்டுத்துறை, அரசியல் அனுபவங்களை ஆய்வு ரீதியிலான அனுகுமுறைகளுடனான கலந்துரையாடலுக்கு உட்படுத்துவதோடு அதனை முறையாக ஆவணப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டமைத்துள்ளது.
ஒரு விடயம் தொடர்பாக மாதமொன்றில் இரண்டு ஆய்வரங்குகள் நிபுணத்துவம் வாய்ந்த ஆளுமைகளின் தலைமையில் இடம்பெறும். புலமை வாய்ந்த ஆய்வாளர்களையும், இத்துறையில் வளர முனையும் ஈடுபாட்டாளர்களையும் இணைத்துக்கொண்ட வகையில் ஆய்வரங்குகள் ஏற்பாடு செய்யப்படும்.
மலையகத்தோடு தொடர்புபட்ட சகலத்துறையினரும் இக் கலந்துரையாடலில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இதன் மூலம் மலையக சமூகத்தின் அடுத்தக்கட்ட நகர்வுக்கான முன்மொழிவுகளை விதந்துரைக்கும் களமாக அமையப்பெறும்.
இதனுடன் திட்டமிடப்பட்டுள்ள இணையவழியிலான ஆய்வரங்குகளின் கால அட்டவணையையும் இணைக்கின்றேன். உங்கள் பெறுமதிமிக்க பங்கேற்பையும், பங்களிப்பையும் வழங்கி உதவுமாறு வேண்டுகிறோம்.
நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம் மலையகம் – 200ஐ முன்னிறுத்தி ஏற்பாடு செய்துள்ள இணையவழியிலான தொடர் ஆய்வரங்க கால அட்டவணை.
தொடர் இல
காலம் ஆய்வரங்க விடயம்
01.
மே – 2023 மலையக நாட்டார் பாடல்கள்.
02.
யூன் – 2023 மலையக பழமொழிகள்.
03.
யூலை – 2023 மலையக வீதிப்பாடல்கள்.
04.
ஆகஸ்ட் – 2023 ;மலையக நிகழ்த்துக்கலைகள.; (மக்கூத்துக்கள் தவிர்ந்த)
05.
செப்டெம்பர் – 2023 மலையக இசைப் பாரம்பரியம்.
06.
ஓக்டோபர் – 2023 மலையக ஓவியப் பாரம்பரியம்.
07.
நவம்பர் – 2023 கல்வெட்டியலில் மலையகத் தடங்கள்.
08.
டிசம்பர் – 2023 மலையக மார்கழி பஜனை வழிபாட்டு பாரம்பரியம்.
09.
ஜனவரி – 2024 மலையக சிறுதெய்வ வழிபாட்டு பாரம்பரியம்.
10.
பெப்ரவரி – 2024 மலையகத்தின் முக்கூத்துக்கள்.
11.
மார்ச் – 2024 மலையக பத்தி எழுத்துக்கள்.
12.
ஏப்ரல் – 2024 மலையக இதழ்கள்.;
13.
மே – 2024 மலையக சிற்பத்துறை பாரம்பரியம்.
14.
யூன் – 2024 சினிமாத்துறையில் மலையகம்.
15.
யூலை – 2024 மலையக குறுந்திரைப்படங்கள்.
16.
ஆகஸ்ட் – 2024 மலையக கல்வி வாய்ப்புகள்.
17.
செப்டெம்பர் – 2024 மலையக தொழிற்சங்க பாரம்பரியம்.
18.
ஓக்டோபர் – 2024 மலையக அரசியல் இயங்கு தளம்.
19.
நவம்பர் – 2024 மலையக சமூகம் உள்ளக இடப்பெயர்வு.
20.
டிசம்பர் – 2024 மலையக சமூகம் தீவுக்கு அப்பால் புலம்பெயர்வு.
21.
ஜனவரி – 2025 மலையக இயற்கை வைத்திய பாரம்பரியம்.
22.
பெப்ரவரி – 2025 மலையக புலங்கு பொருட்கள்.
23.
மார்ச் – 2025 மலையக கவிதைகள்.
24.
ஏப்ரல் – 2025 மலையகத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் வகிபங்குகள்.
25.
மே; – 2025 மலையக சமூக, கலை, இலக்கிய இயக்கங்கள்.
26.
யூலை – 2025 மலையக சிறுகதைகள்.
27.
யூலை; – 2025 விளையாட்டுத்துறையில் மலையகம்.
28.
ஆகஸ்ட் – 2025 ஊடகத்துறையும் மலையகமும்.
29.
செப்டெம்பர் – 2025
மலையக பாடல் புனைவு முயற்சிகள்.
30.
;ஒக்டோபர் – 2025 மலையக ஆன்மீகம் சார் இயக்கங்களின் வகிபங்குகள்.
31.
நவம்பர் – 2025 இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் மலையகம்.
32.
டிசமபர் – 2025 மலையகம் எனும் பிற்புலத்தில் கல்வி நிறுவனங்களின் வகிபங்கு.
33.
ஜனவரி – 2026 மலையக வீடமைப்பு
34.
பெப்ரவரி – 2026 மலையக நாவல்கள்
35.
மார்ச் – 2026 மலையக பாடல் புனைவு முயற்சிகள்.
36.
ஏப்ரல் – 2026 மலையக அரங்கியல் முன்னெடுப்புகள்.
37.
மே -2026 மலையக ஆய்வுத்துறை முயற்சிகள்.
38.
யூன் – 2026 பிற மொழிகளில் மலையக படைப்புகள்.
39.
யூலை – 2026 சிறுவர் இலக்கியத்தில் மலையகத்தவர்களின் வகிபங்கு.
40.
ஆகஸ்ட் – 2026 மொழிப்பெயர்ப்பு முயற்சிகளும் மலையகமும்.
41.
செப்டெம்பர் – 2026 மலையக பதிப்பு முயற்சிகள்
42.
ஓக்டோபர் – 2026 மலையக இலக்கிய இயக்கங்கள்.
43.
நவம்பர் – 2026 மலையக அலங்கார பாரம்பரியம்.
44.
டிசம்பர்; – 2026 அரசத்துறை தொழில் வாய்ப்புகளில் மலையகம்.
45.
;ஜனவரி – 2027 ஆவணப்படுத்தலும் மலையகமும்.
46.
பெபரவரி; – 2027 மலையக தொழிற்சங்க போராட்டங்கள்.
47.
மார்ச் – 2027 இடதுசாரிய அரசியலும் மலையகமும்.
48.
ஏப்ரல் – 2027 புலம்பெயர்வு இலக்கிய முயற்சிகளில் மலையகம்.
49.
மே – 2027 சட்டம் நீதி நிர்வாகத்துறைகளில் மலையகம்.
50
யூன் – 2027 ஏனைய அமைப்புகாளால் நிகழ்த்தப்பட்ட மலையகம் 200 அனுடிப்பு நிகழ்வுகளின் தொகுப்பு. ஆவணப்படுத்தலுக்காக.
இறுதி நிகழ்வு
மாதம் முதலாம், மூன்றாம் சனிக்கிழமைகளில் பி.ப 6.30 மணித்தொடக்கம் இடம்பெறும். இரண்டு அமர்வுகளில் குறித்த விடயம் தொடர்பில் ஆய்வுரைகள், கலந்துரையாடல்கள் நிகழ்த்தப்;படும்.
ஆய்வாளர்கள் தாங்கள் முன்வைக்க விரும்பும் விடயப்பரப்பு தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு காத்திரமான பங்களிப்பை வழங்குமாறு வேண்டுகிறோம்.
ணழழஅ தொழில்நுட்பத்தில் இடம்பெறும் இவ் அரங்குகள் முகநூல் நேரலையாகவும், லழர வரடிந வழியாகவும் ஆவணப்படுத்துவதோடு ஒவ்வொரு தலைப்புகளிலும் நூலாகவும் வெளியிடப்படும்.
இம் முயற்சியில் தங்களது ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் எதிர்பார்ப்பதோடு ஆர்வமுள்ள ஏனைய அன்பர்களையும் இணைக்குமாறு வேண்டுகிறோம்.
தங்கள் முன்வைக்கும் ஆய்வுரைக்கான கட்டுரையை நிகழ்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம். மேலதிக விபரங்களை அறிய 0771654372 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்க.
நன்றி,
பணிவன்புடன்,
அ.லெட்சுமணன்,
பிரதான அமைப்பாளர்,
நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம்.
ஆசிரியர் – நிகர் சஞ்சிகை
