320 P வெளிஓயா கிராம அலுவலர் பிரிவில் கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் மேம்பாட்டு கலாச்சார கொண்டாட்ட நிகழ்வு வெளிஓயா கீழ்பிரிவு சூப்பர் ஸ்டார் மைதானத்தில் 2023.05.07 அன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த மூன்று வருடங்களில் நாட்டை உலுக்கிய கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் சிறுவர்கள் தொடர்ச்சியாக உள பாதிப்புகளை வெளிப்படுத்துவதை கண்ணுற்றதன் விளைவாக கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு வர்ல்ட் விஷன் நிறுவனத்தின் இணை அனுசரணையுடன் முழுக்க முழுக்க சிறுவர்களின் மகிழ்ச்சியை இலக்காக வைத்து இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் , வர்ல்ட் விஷன் நிறுவன பிராந்திய முகாமையாளர் பிரான்சிஸ் , CDPO நிறுவன கள உத்தியோகத்தர் திருமதி . காருண்யா ஆக்ரோயா பாதிரியார் ஜெபசெல்வன் ஆகியோர் சிறப்பு விருதினர்களாக கலந்து கொண்டிருந்த அதேவேளையில் வெளிஓயா கிராம அலுவலர் திருமதி .வீணாதேவி தலைமையில் VCDC கழகம் , world vision நிறுவனம் ,தோட்ட தலைவர்கள் ,கோயில் கமிட்டி , பிரஜா பொலிஸ் , தன்னார்வ தொண்டர்கள் அரச உத்தியோகத்தர்கள் என அனைவரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



