Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

October 14, 2026

இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

October 14, 2026

பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது
மலையகம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

ThanaBy ThanaJune 30, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

போலந்து மற்றும் மலேசியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாகக் கூறி ஒரு கோடியே முப்பதாயிரம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டுப் பயணத்திற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்செலாகே ஷியாமலி என்ற சந்தேக நபர், 2021 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து Royal Dream International என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் அதற்குரிய மீள்பதிவுக்கான காலத்தை எட்டியுள்ள போதும் உரிமம் புதுப்பிக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. வெளிநாட்டு வேலை தேடுபவர்களிடம் வேலைவாய்ப்புகளை தேடி தருவதாக கூறி பணம் வசூலித்து, உறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என குறிப்பிட்ட பணியகம் மீது 53 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.

இதற்கமைய பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இந்த பெண்ணை கைது செய்ய முயன்ற போதிலும், அவர் விசாரணை அதிகாரிகளை தவிர்த்துவிட்டு தலைமறைவானார், குறிப்பிட்ட காரணத்தினால் நீதிமன்றத்தால் அவருக்கு 31.05.2023 அன்று பயணத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை (29) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை 2023ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான வெளிநாட்டு தொழில் கடத்தல்காரர்கள் அல்லது மோசடி நிறுவனங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பணியகத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1989 அல்லது பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் தொலைபேசி இலக்கமான 0112864241 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பணியகத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

    October 14, 2026

    நாட்டை அண்மித்த கடற்பகுதியில் நிலவும் கொந்தளிப்பான வானிலை – நாட்டின் பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை!

    October 14, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

    October 13, 2026
    Editors Picks

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026

    கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

    October 14, 2026

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.