Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

October 14, 2026

இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

October 14, 2026

பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
மலையகம்

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

ThanaBy ThanaJuly 3, 2023Updated:July 3, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்.

 

ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

 

ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட தோட்டங்களில் நீண்டகாலமாக நிலவும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டமொன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கொழும்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்றது.

 

இ.தொ.காவின் சார்பில் அதன் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உப தலைவர் பாரத் அருள்சாமி, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து, தொழிற்சங்க தேசிய அமைப்பாளர் லோகதாஸ், கட்சி போஷகர் சிவராஜா,  தோட்ட கமிட்டி தலைவர்களும், ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்தின் சார்பில் அதன் நிறைவேற்று முகாமையாளர் வருண மற்றும் தோட்ட முகாமையாளர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

 

இதன்போது தொழில் பிணக்குகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.

 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை மாத்திரம் சுரண்டிக்கொண்டிருக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபோவதாகவும், தீர்வை வழங்காவிட்டால் ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

 

இந்நிலையில் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என தோட்ட நிறுவன தரப்பில் அமைச்சருக்கு உறுதியளிக்கப்பட்டது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

    October 14, 2026

    நாட்டை அண்மித்த கடற்பகுதியில் நிலவும் கொந்தளிப்பான வானிலை – நாட்டின் பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை!

    October 14, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

    October 13, 2026
    Editors Picks

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026

    கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

    October 14, 2026

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.