தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள தாய் ராஜா மற்றும் கந்துல ஆகிய யானைகளை மீளவும் பெற்றுக்கொள்வது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹரன்போல் தெரிவித்துள்ளார்.
தாய் ராஜா எனப்படும் யானையின் நலனைப் பார்வையிட இன்று (6) அவர் கண்டிக்கு விஜயம் செய்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்ட தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இதுவரையில் ராஜதந்திர மட்டத்தில் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தாய் ராஜா யானையானது, 37 ஆண்டுகளுக்கு முன்பு தலதா மாளிகைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள நிலையில், சோர்வு காரணமாக சுதுஹம்பொல ரஜமஹா விகாரையில் கட்டப்பட்டுள்ள அதன் உடல்நிலையை பரிசோதித்ததன் பின்னர் யானை நலமுடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
