Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

August 3, 2026

2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

August 3, 2026

மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

August 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு
Breaking

நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

ThanaBy ThanaAugust 3, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழை மற்றும் கடும் காற்று காரணமாக, இரண்டு வெவ்வேறு தோட்டப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் இடர் நிலவரங்களால் 55 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

​அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்திற்கு சொந்தமான பிலக்வாட்டர கெனில் வத்த பகுதியில், இரவு முழுவதும் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட 26 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர், இன்று (3ஆம் திகதி) அதிகாலை வேளையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

​இதேவேளை, கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உரித்தான மேபில்ட் தோட்டத்தின் ரொப்கீல் பிரிவில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, 30 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

​இதனிடையே, நேற்று காலை முதல் இன்று காலை வரையிலான காலப்பகுதியில் பதிவான மழை வீழ்ச்சி விவரங்களை காலநிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய,

​கங்க இகல கோரலை பகுதியில் 196.6 மில்லிமீற்றர் மழையும்,

​கிரிவன்னெளிய பகுதியில் 184.2 மில்லிமீற்றர் மழையும்,

​அரநாயக்க பகுதியில் 182.6 மில்லிமீற்றர் மழையும்,

​வட்டவளை பகுதியில் 163.2 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளன.

​தொடர்ந்து நிலவிவரும் கடும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி -பெருமாள்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    August 3, 2026

    நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு பகுதிகள் உட்பட நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

    August 3, 2026

    சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியாவில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கு சாத்தியம்!

    August 3, 2026

    மலையகத்தில் சீரற்ற வானிலை: ஹட்டன் மற்றும் நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து அதிபர்களே தீர்மானிக்க அனுமதி!

    August 3, 2026
    Editors Picks

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026

    மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    August 3, 2026

    நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு பகுதிகள் உட்பட நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

    August 3, 2026

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026

    மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    August 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.