50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 300 ரூபாவினால் குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இன்று (6) தெரிவித்தார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் சீமெந்து நிறுவனங்களுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்டுமானத் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இரும்பு, ஓடுகள், அலுமினியம், கம்பி போன்றவற்றின் விலைகளை குறைப்பது தொடர்பில் குறித்த பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
