காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த மாதம் 5ஆம் திகதி ரயிலில் மோதி காயங்களுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவித்துள்ள பொலிஸார், 5அடி 4 அங்குலம் உயரமானவர் என்றும் அவர் இறுதியாக வெள்ளை நிற மேற்சட்டையுடன் இள ஊதா நிற பாவாடை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்தப் பெண்ணை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறும் ராகம பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
