பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலத்தின் மூலம் ஆயுர்வேத துறைக்கு தேவையான கஞ்சாவை நாட்டில் பயிரிடும் அதிகாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
“சட்ட விதிகள் இல்லாமல் கஞ்சா செடிகளை வளர்த்தால் சிறைக்கு செல்ல நேரிடும். பொறுப்பின்றி இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட முடியாது. அது தொடர்பான கால வரையறைகள் சட்டமூலம் நிறைவேற்றப்படும் நாளுக்கு அமைய தான் நிர்ணயிக்கப்படும். எனவே ஆயுர்வேத துறைக்குத் தேவையான கஞ்சாவை பயிரிடும் அதிகாரம் பெற்றுக்கொடுக்கப்படும். இது தொடர்பான விதிமுறைகளை ஆயுர்வேத ஆணையாளர் வெளியிட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
