கிராண்ட்பாஸ்- நாகலகம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்கள் பயன்படுத்திய கூரிய ஆயுதங்கள், இரண்டு ஓட்டோக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதான செல்வகுமார் ஷியாமல் சசிந்து என்ற இளைஞரே கொல்லப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலை சம்பவத்துக்கு போதைப் பொருள் வர்த்தகத்தால் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கலே காரணம் என தெரிவித்துள்ள பொலிஸார், சில மாதங்களுக்கு முன்னர் கொலையுண்ட இளைஞர், மற்றுமொரு இளைஞரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களுள் ஏற்கெனவே காயங்களுக்கு உள்ளான இளைஞரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
