Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

August 3, 2026

நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

August 3, 2026

2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

August 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » குருந்தூர்மலையில் இடம்பெற்ற கசக்கும் சம்பவம்.
இலங்கை

குருந்தூர்மலையில் இடம்பெற்ற கசக்கும் சம்பவம்.

ThanaBy ThanaJuly 15, 2023Updated:July 15, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் 14.07.2023 இன்றைய தினம் பொங்கல் வழிபாடு ஒன்றினை மேற்கொள்வதற்காக முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் குறித்த பொங்கல் வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக பெருமளவான தமிழ் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிலரும் குருந்தூர்மலைப் பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

இதேவேளை குருந்தூர்மலைக்கு பௌத்த தேரர்கள் உள்ளிட்ட, பெருமளவான பெரும்பான்மை இனத்தவர்கள் பேருந்துகளில் குருந்தூர்மலைக்கு வருகைதந்திருந்தமையினையும் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

இவ்வாறான சூழலில் தமிழ் மற்றும், பெரும்பாண்மை இனத்தவர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு குருந்தூர்மலையில் மிகப் பாரிய அளவில் பொலிார் குவிக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் அங்கு தமது கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு வருகைதந்த குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரும், அடியவர்களும் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தயாரானபோது, பௌத்த தேரர்களாலும், பெரும்பான்மையினத்தைச் சார்ந்தோராலும் இடையூறுசெய்யப்பட்டன.

இந் நிலையில் அங்கிருந்த பொலிஸார் பௌத்த மதகுருக்களை நோக்கி, “இது பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு இல்லை. அனைத்து இனங்களுக்கும், அனைத்து மதத்தவர்களுக்கும் சொந்தமான நாடு. சட்டத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போன்று அனைவருக்கும் மத சுதந்திரம் உண்டு. ஆகவே இவர்களது வழிபாட்டை குழப்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தமது வழிபாட்டு உரிமையினைத் தடுக்காது, தம்மை பொங்கல் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறும் பொலிஸ் மற்றும், தொல்லியல் திணைக்களத்தினரைக் கேட்டுக்கொண்டனர்.

இந் நிலையில் நிலத்தில் தீ படாதவாறு, கற்களை வைத்து, அதற்குமேல் தகரங்களை வைத்து, அதற்குமேல் மூன்று கற்களை வைத்து பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபடலாம்என தொல்லியல் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

தொல்லியல் திணைக்களத்தினரின் குறித்த நிபந்தனையானது சைவ பொங்கல் வழிபாட்டு நெறிமுறைக்கு மாறாக இருப்பதாக ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரும் அடியவர்களும் சுட்டிக்காட்டினர். எனினும் தொல்லியல் திணைக்களத்தினரின் குறித்த நிபந்தனைக்கு அமைவாக பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

அப்போது அங்கு சூழ்ந்திருந்த பௌத்த தேரர்களும், பெரும்பாண்மை இனத்தவர்களும் பொங்கல் வழிபாட்டு முயற்சிக்கு மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந் நிலையில் அடியார்கள் பொங்கல் பொங்குவதற்காக அடுப்பினை தயார்ப்படுத்தியபோது, அங்கிருந்த பொலிசார் அடுப்பினை சேதப்படுத்தினர்.

பொலிசாரின் இத்தகைய செயற்பாட்டிற்கு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரும், அடியவர்களும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.

அத்தோடு தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைக்கு அமைவாக, அனுமதியினைப் பெற்று பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றபோது, இவ்வாறு அநாகரிகமான முறையில் பொலிசார் செயற்பட்டதற்கான காரணம் தொடர்பில் அடியவர்களும், அங்கிருந்த அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கேள்வி எழுப்பினர்.

இந் நிலையில் தொல்லியல் பிரதேசத்திற்குள் ‘தீ’ இட முடியாது எனபொலிசார் தெரிவித்ததுடன், வெளியே பொங்கலைத் தயாரித்து அங்கு கொண்டுவந்து படையல் இடமுடியுமெனத் தெரிவித்தனர்.

அத்தோடு அங்கு சமாதானக்குலைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொங்கல் மேற்கொள்ள முடியாது எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறான சூழலில் அங்கு குழுமியிருந்த அடியவர்கள் ஒன்று சேர்ந்து பக்தி பரவசத்துடன், சிவபுராணம் இசைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இவ்வாறு சிவபுராணம் இசைத்து வழிபாடுகளில் ஈடுபடுவதைக் குழப்புகின்றவகையில் அங்கிருந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் சத்தமாகக் கூச்சலிட்டனர்.

அத்தோடு நின்றுவிடாமல் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்குரிய திரிசூலம் இருந்த பகுதிக்குள் நுழைந்த பெரும்பாண்மை இனத்தவர்களும், பௌத்த தேரர்களும் பௌத்த பாராயணங்களை மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபடவும் ஆரம்பித்தனர்.

இந்நிலையில் குறித்த திரிசூலம் இருந்த பகுதிக்குள் நுழைவதற்கு தமிழ் மக்களை நுழையவிடாத பொலிசார், பெரும்பாண்மை இனத்தவர்களையும், பௌத்த தேரர்களையும் எவ்வாறு நுழைய விட முடியுமென அங்கிருந்த தமிழ் மக்களால் கேள்வி எழுப்பப்பட்டதுடன், அங்கு சிறிய குழப்ப நிலையும் ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து பெரும்பாண்மை இனத்நவர்களும், பௌத்த தேரர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

குருந்தூர் மலையில் சிறிதுநேரம் வழிபாட்டிற்கு கால அவகாசம் வழங்கிய பொலிசார்; விசேட பால் அபிஷேகவழிபாட்டில் ஈடுபட்ட தமிழ் மக்கள்

இந் நிலையில் சிறிதுநேரம் பொலிசாரால் வழிபாட்டிற்கென தமிழ்மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந் நிலையில் தேவார பாராயணங்கள் பாடப்பட்டு, திரிசூலம் இருந்த பகுதியின் வாயிலில், பூச்சொரிந்து, தேங்காய்கள் உடைக்கப்பட்டு, பாலால் அபிசேகம் செய்யப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026

    மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    August 3, 2026

    சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியாவில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கு சாத்தியம்!

    August 3, 2026
    Editors Picks

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026

    மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.