தாய்லாந்தில் இடம்பெற்று வரும் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஆடவருக்கான 4 x 400 அஞ்சல் ஓட்டப் போட்டியில் இந்த பதக்கம் கிடைத்துள்ளது.
முன்னதாக, மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் தருஷி கருணாரட்ண புதிய தேசிய சாதனையை நிகழ்த்தி தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
இந்த போட்டி தூரத்தை 2 நிமிடங்கள் 0.6 செக்கனில் கடந்து முதலாம் இடத்தை பெற்று தருஷி கருணாரட்ண சாதனை படைத்திருந்தார்.
அதேநேரம், இந்த போட்டியில் பங்கேற்ற கயந்திகா அபேரத்ன 2 நிமிடங்கள் 3.25 செக்கனில் போட்டி இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இதேவேளை, மகளிருக்கான 400×4 அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளி பதக்கம் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.