Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிராண்ட்பாஸ் மஹவத்தயில் திடீர் தீ விபத்து: 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரை!

October 13, 2026

கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

October 13, 2026

கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,
மலையகம்

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

ThanaBy ThanaJuly 26, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

நுவரெலியா பிரதான நகரில் சமாதான நீதவான்கள் சிலர் “சத்தியக் கடதாசி மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் தமது கையொப்பத்தையும் முகவரியையும் குறிப்பிட்டு இலட்சிணையையும் பதித்து பணம் சம்பாதிக்கும் மோசடியில் ஈடுபடுவது அம்பலமாகியுள்ளது.

“மக்களுக்கு சேவையாற்றும் நோக்குடன் சமூகத்திலுள்ள கௌரவமான பிரஜைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சமாதான நீதவான் பதவிகள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டு வருகிறது தகுதியற்றவர்கள் பலர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுவருகின்றனர்.

மேலும் பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் பிரமாணப்பத்திரங்கள்மற்றும் ஆவணங்கள் உட்பட பிறசான்றிதழ்களை சான்றளித்தல் மற்றும் அங்கீகரித்தல் ஊடாக பொதுமக்களுக்கு இலவசமான சேவைகளையும் பணிகளையும் வழங்கும் நோக்குடன் கௌரவ நீதி அமைச்சரால் சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகிறது.

தேசிய நலனிற்கும் சமூக மேம்பாட்டிற்கும் பங்காற்றியமையையிட்டு நற்பிரஜையினருக்கு மாத்திரம் வழங்கப்பட வேண்டிய இவ்வுயர் கௌரவப் பதவி இன்று பிரதேச அரசியல்வாதிகளதும் கட்சி அமைப்பாளர்களதும் மற்றும் அமைச்சர்களதும் விருப்பத்திற்குரியவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் வழங்கப்படும் சேவை மாறாக மாறியுள்ளது.

ஆவனங்களை அத்தாட்சிப்படுத்துவதுமாத்திரமின்றிகிராமியமக்கள் மத்தியில் சமாதானம்மற்றும் சகவாழ் வுஉட்பட அனைத்து பொது நலப்பணிகளிலும் சேவைமனப் பான்மையுடன் பங்கேற்க வேண்டுமெனவும் அனைத்து சமாதான நீதவான்களிடமும் அரசு எதிர்பார்க்கிறது ஆனால் அது நுவரெலியாவில் தலைகீழாக மாறியுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் அரசியல் அமைப்பிற்கு முரணின்றியும், முற்றிலும் இலவசமாகவும் மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் எதிர்பார்க்கிறது.

இது தொடர்பாக நீதி அமைச்சின் ஊடாக அனைத்து சமாதான நீதவான்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெறும் சத்தியப் பிரமாணத்தின் போதும் உறுதி அளிக்கின்றனர்.

எனினும் மேற்படி அனைத்து சட்டதிட்டங்கள் மற்றும் உறுதிமொழிகள் அனைத்தையும் மீறும் வகையில் சமாதான நீதவான்கள் செயற்பட்டுவருவதாகவும் நுவரெலியாவில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றன,

குறிப்பாக தோட்டபுறங்களில் அல்லது தூர இடங்களிலிருந்து வரும்மக்களின் பிரச்சினைகளையும் மன நிலைகளை நன்கறிந்து வைத்துள்ள மேற்படி சமாதான நீதவான்கள் விண்ணப்பபடிவங்களை நிரப்பிக் கொடுத்தும், ஆவனங்களை அத்தாட்சிப்படுத்தியும், கையொப்பங்களை இட்டும் ஆயிரக்கணக்கான ரூபாக்களை மக்களிடம் சுரண்டும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றன எனவே இவ்வாறு நுவரெலியா பிரதான நகரில் செயற்படும் சமாதான நீதவான்களுக்கு நீதி அமைச்சு சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

    October 13, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026
    Editors Picks

    கிராண்ட்பாஸ் மஹவத்தயில் திடீர் தீ விபத்து: 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரை!

    October 13, 2026

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    கிராண்ட்பாஸ் மஹவத்தயில் திடீர் தீ விபத்து: 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரை!

    October 13, 2026

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.