வத்தளை பிரதான வீதியில் பெண்ணொருவரை கைவிலங்கிட்டு இழுத்துச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக பொலிஸ் சார்ஜன்ட் பெண்ணை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தாக்கப்பட்டு பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் பெண்ணொருவர் அலறும் சத்தத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த போது, குறித்த பெண் பெண்ணின் நெற்றியில் காயங்களுடனும் கையில் விலங்குடனும் இருந்துள்ளார்.
பொலிஸ் சார்ஜென்ட்டும் அருகில் நின்று கொண்டிருந்ததுடன், அவர் ஜா பொலிஸ் நிலையத்துடன் இணைந்த குருந்துவத்தை பொலிஸில் கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது.
