லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து கார்லோஸ் அல்கராஸ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
20 வயதான ஸ்பெய்ன் வீரர் பெறும் முதலாவது விம்பிள்டன் பட்டம் இதுவாகும்.
சுமார் 4 மணி நேரம் 42 நிமிடங்கள் நீடித்த போட்டியில் 1-6, 7-6(6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் அல்கராஸ்.
இதனால் 7 முறை சாம்பியனும், 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
