25 ஆவது ஆசிய தடகளப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தனர்.
தாய்லாந்தின் -பாங்கொக்கில் இருந்து நாட்டை வந்தடைந்த வீரர்களை வரவேற்க விளையாட்டு அமைச்சு, தடகள சங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு வருகைத் தந்திருந்தனர்.
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் இலங்கை வீரர்கள் 03 தங்கப் பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களுடன் தரவரிசையில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
