அங்குருவாதொட்ட, ஊருதுடாவ பிரதேசத்திலிருந்து காணாமல் போன இளம் தாய் மற்றும் அவரது மகளின் சடலங்கள் அங்குருவாதொட்ட -ரத்மல்கொட காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்த நிலையில் காணாமல் போயுள்ளனர்.
அவரது கணவர் வேலைக்குச் சென்று வீடு திரும்பியதும் வீட்டிலிருந்த மனைவி மற்றும் குழந்தை காணாமல் போயுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் காட்டிலிருந்து இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
