கண்டி- பல்லேகலையில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் மகாவலி ஆற்றில் பாய்ந்துள்ள சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
இவ்வாறு ஆற்றில் பாய்ந்த கைதி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை- சீவலி லேனைச் சேர்ந்த மொஹமட் ரம்சீன் என்பவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (20) திறந்தவெளிச் சிறைச்சாலையின் பயிர்ச்செய்கைப் பிரிவில் வேலை செய்துக்கொண்டிருந்தவாறு தப்பிச் சென்ற போது, சிறைக்காவலர்கள் அவரைத் துரத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த நபர் மகாவலி ஆற்றில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பல்லேகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
