கொழும்பு காலிமுகத்திடலில் 7 வயது சிறுமி ஒருவரை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் 33 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது பெற்றோருடன் காலிமுகத்திடலில் நின்றிருந்த வேளையில் குறித்த சிறுமியை அவர் கடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பெற்றோர் உதவிக்கோரி கூச்சலிட்டதை அடுத்து அயலில் இருந்தவர்கள் அவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் உடப்புசலாவை பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

