பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை கொழும்பு. எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுகளுக்கு நீண்ட நேரம் தாக்கு பிடிக்காது அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.
இறுதியாக 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கையால் 166 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
இலங்கை சார்பில் அதிகபடியாக தனஞ்சய டிசில்வா மாத்திரம் 57 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமட் 4 விக்கெட்டுக்களையும், நசீம் ஷா 3 விக்கெட்டுக்களையும் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஒரு விக்கெட்டுனையும் வீழ்த்தினர்.
தற்சமயம் பாகிஸ்தான் அணியானது தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வருகிறது.

