கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ் வட்டவளை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
15 அடி பள்ளத்தில் குடை சாய்ந்தே இவ் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தின் போது 100க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகவும், 18 பேர் காயமடைந்ததோடு, ஆபத்தான நிலையில் இருந்த நால்வர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஏனையோர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஷான் சதீஸ்


