டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வனிந்து ஹசரங்கவின் கோரிக்கையினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) ஏற்றுக் கொண்டுள்ளது.
இலங்கையின் சகலதுறை நட்சத்திரம் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முடிவு செய்துள்ளார்.
எனினும் அவர் ஒருநாள் மற்றும் டி:20 போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவதற்கான உறுதிப்பாட்டினையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான கடிதத்தினையும் வனிந்து ஹசரங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி தேசிய அணிக்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்க விரும்புவதாக அவர் சுட்டிக்கட்டியுள்ளார்.
இந் நிலையில், அவரது முடிவு குறித்து தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா, நாங்கள் அவரது முடிவை ஏற்றுக்கொள்வோம்.
மேலும் எங்கள் வெள்ளை பந்து திட்டத்தில் ஹசரங்க ஒரு முக்கிய அங்கமாக இருப்பார் என்றார்.

