இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர் மழையால் களு கங்கை மற்றும் வளவ கங்கை அதன் கிளை ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்ததால் கஹவத்த,பெல்மடுல்ல,பலாங்கொடை,இரக்குவானை, பம்பஹின்ன,
கல்தொட்ட, பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
அத்தோடு சூரியகந்த ஊருபொக்க பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது.இதனால் போக்குவரத்து முற்றாக தடைபட்டது.

