கெஹெலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சராக கலாநிதி ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக கலாநிதி ரமேஷ் பத்திரண, கைத்தொழில் அமைச்சராகவும் செயற்படவுள்ளார்.
இதனிடையே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
