அடுத்த (24) ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருகிக்கின்றது.
அதேவேளை 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் கட்டத்தின் முதலாம் தவணை எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 16 ஆம் திகதி நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய 2024 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
