பதுளை – ஹாலிஎல உடுவர 06 வது மைல்கல் பகுதியில் உள்ள கந்தகொல்ல பத்தனையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இரண்டு யுவதிகள் உயிரிழந்தனர்.
மண்சரிவில் சிக்கிய 21 வயதான குறித்த இரு யுவதிகளும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலங்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

