விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றில் இருந்து தன்னை ஜனாதிபதி நீக்கியுள்ளதாக தனக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பொறுப்பு கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்து வெளியிட்டு சில மணித்தியாலங்களிலேயே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
