Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்…

August 13, 2026

52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

August 13, 2026

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைப் புதுப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள்…
இலங்கை

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைப் புதுப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள்…

ThanaBy ThanaJanuary 3, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த நகர அபிவிருத்தித்; திட்டங்கள் நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அந்த அதிகாரசபையால் வருடாந்தம் வழங்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நிறுவப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய பணிகள் நகர அபிவிருத்தி அதிகார வரம்புகளாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான பொருளாதார> சமூக> சுற்றுச்சூழல் மற்றும் பௌதீக ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டங்களை தயாரிப்பதாகும்.

தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையானது 276 உள்ளூராட்சி மன்றங்களை நகர பிரதேசங்களாக அறிவித்துள்ளது. 87 உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 31 அபிவிருத்தித் திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதோடு மேலும் 2023 ஆம் ஆண்டில் 12 அபிவிருத்தித் திட்டங்கள் மட்டுமே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் வருடத்திற்கு 22 அபிவிருத்தித் திட்டங்களின் 163 திட்டங்களைத் தயாரிப்பதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு இலக்கு வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக கொழும்பு மற்றும் மேல மாகாண பிரதேச மாநகர திட்டம்> ஹம்பாந்தோட்டை மாநகர திட்டம்> கிழக்கு மாகாண சுற்றுலா வலயம் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக நுவரெலியாவை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வதற்கான பெரிய கண்டி திட்டமும் இவ்வருடத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

2024 – 2026 ஆகிய இரண்டு வருடங்களில் 66 அபிவிருத்தி திட்டங்களை வர்த்தமானியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அவற்றில் 6 மாநகர சபைகள், 14 நகர சபைகள் மற்றும் 46 உள்ளூராட்சி சபைகள் உள்ளடங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சில அபிவிருத்தித் திட்டங்களில் சிக்கல் நிலைகள் காணப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க முடியும் என்றார்.

1999 முதல் 2023 செப்டம்பர் 30 வiர் 87 உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய பழைய காலாவதியான அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் 56 திருத்தப்பட்ட திட்டங்களை மீள்பிரசுரம் செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

முனீரா அபூபக்கர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்…

    August 13, 2026

    52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

    August 13, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

    August 13, 2026

    முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

    August 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.