Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

August 9, 2026

மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

August 9, 2026

நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

August 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாவலப்பிட்டியில் தாயை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த மகன் கைது.
மலையகம்

நாவலப்பிட்டியில் தாயை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த மகன் கைது.

ThanaBy ThanaJanuary 26, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தனது தாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த மகன் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.செல்லம்மா என்ற 67 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் 41 வயதுடைய உயிரிழந்தவரின் இளைய மகன் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது தாயை பலமாக தாக்கியதில் அவரது தலை பகுதியில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது விலா எலும்புகள் 22 துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ளதாகவும் மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தையின் தலையில் பலமாக தாக்கியதில் காயமடைந்த தந்தை தனது மூத்த மகளின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் கடந்த 17 ஆம் திகதி தனது மனைவியை தாக்கியதில் அவரது மனைவி குழந்தைகளுடன் தனது தாயின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது தாயுடன் வசித்து வந்த சந்தேக நபர் கடந்த 20 ஆம் திகதி அன்று தனது தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் 16 வயதிலேயே கூலி வேலைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவரை பற்றி எவரும் கவலைப்படவில்லை எனவும் கூறி தாயை தாக்கியுள்ளார்.

பின்னர் அவர் தனிப்பட்ட வேலை ஒன்றிற்காக நாவலப்பிட்டி பிரதேசத்திற்கு சென்று மதியம் 4 மணிக்கு வீடு திரும்பிய நிலையில் அவரது தாய் வீட்டிற்குள் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் இது தொடர்பில் பிரதேசவாசிகளிடம் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரிடம் தனது தாய் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் மரண விசாரணையில் உயிரிழந்தவர் பலமாக தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026
    Editors Picks

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.