கல்வி ஒன்றே எம் சமூகத்தின் மாற்றத்திற்கான ஆயுதம் என்ற சிந்தனைக்கு அமைய, தெல்தொட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள க/லிட்டில் வெளி தமிழ் வித்தியாலயத்தில் உடைந்து விழும் அபாயத்திலிருந்த பாடசாலைக் கட்டிடத்தை தனது சொந்த முயற்சியால் நண்பர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்களின் நிதிப்பங்களிப்பில் முழுமையாக மறுசீரமைப்பு செய்து நேற்றைய தினம் 02.02.2024 அன்று திரு.V.G.பிரேம் அவர்கள் பாடசாலை அதிபரிடம் கையளிப்பு செய்தார்.
அத்துடன் அவரின் பிறந்த தினத்தையொட்டி தரம் ஐந்தில் கல்வி பயிலும் 44 மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அயல் பாடசாலை அதிபர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
அத்துடன் இந்த கட்டிடத்தை புனரமைத்துக்கொடுத்த திரு.பிரேம் அவர்களை பாடசாலை அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










