புப்புரஸ்ஸ ஜீகே பிரதேசத்தில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தந்தையே மின்சாரம் தாக்கி மரணாமாகியுள்ளார்.
வறுமை கோட்டில் வாழும் இந்த குடும்பம் மின்சார கட்டணம் கட்ட முடியாமல் ஏற்கனவே மின்சார சபையால் இந்த வீட்டுக்கு மின்சாரம் தூண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் இவர் அருகில் உள்ள வீடுகளில் இருந்து மின்சாரம் பெற்று பாவித்து வந்த நிலையில் இன்று காலை மின்சார வயர் கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கி வீட்டுக்கு உள்ளே மரணமாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பின் புப்புரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





