கொட்டக்கலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில் 10 நாள் வயதுடைய சிசு ( பெண்) ஒன்று முச்சக்கர வண்டியில் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் சிசு மேலதிக பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் இன்று (09/01)காலை 8 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
கௌசல்யா .
