ஹட்டன் டிக்கோயா நகர சபை நிர்வாகத்திற்கு உட்பட்ட ஹட்டன் பஸ் டிப்போக்கு சொந்தமான ஹட்டன் பேருந்து நிலையத்தை முறையாக சுத்திகரிப்பது இல்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.
இப்பேருந்து நிலையம் இன்றைய தினம் குப்பைகள் நிறைந்த துர்நாற்றம் வீசக்கூடிய வகையிலான காட்சிகளை காணக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக பேருந்து நிலையத்தின் நேர கண்காணிப்பாளர் அமர்ந்திருக்கும் அரை குப்பைகள் நிறைந்து காணப்பட்டதோடு அவ்விடத்தில் பயணிகளுக்கு நிற்பதற்கு கூட முடியாத நிலை இருந்ததாக தெரிவிக்கின்றனர்.
தற்போது சிவனொளி பாத மலை காலம் என்பதினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையமானது இவ்வாறு அவலட்சனமாக காணப்படுவது இந்த வகையில் நியாயமானது என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் பல கோடிகள் ரூபா வருமானத்தை ஈட்டும் ஹட்டன் பஸ் டிப்போ மற்றும் ஹட்டன் டிக்கோயா நகர சபை ஆகிய நிறுவனங்கள் ஏன் முறையான சுத்திகரிப்பு சேவையை முன்னெடுப்பதில்லை?
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக தினமும் இந்த பேருந்து நிலையத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பயணிகள் வேண்டுகோள் விடுகின்றனர்.


