பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.”
”கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு, கடந்த 8 வருடங்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில், குறித்த பயணக் கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த போதிலும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த தாமதத்திற்குக் கண்டனம் தெரிவித்தும,கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியுமே இந்த நاتுளாவிய ரீதியிலான பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக நந்தன ரணசிங்க மேலும் தெரிவித்தார்.”
